நடிகராக இருந்த கமல்ஹாசனின் படங்கள் கலெக்ஷனை வாரி குவித்தனவோ இல்லையோ ஆனால் அரசியல்வாதி ஆகிவிட்ட கமலின் கட்சியோ செமத்தியாக கலெக்ஷனை அள்ளிக் குவிக்க துவங்கியிருக்கிறது! என்று தாறுமாறாக நம்மவரை கிண்டலடித்து விமர்சிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
நடிகராக இருந்த கமல்ஹாசனின் படங்கள் கலெக்ஷனை வாரி குவித்தனவோ இல்லையோ ஆனால் அரசியல்வாதி ஆகிவிட்ட கமலின் கட்சியோ செமத்தியாக கலெக்ஷனை அள்ளிக் குவிக்க துவங்கியிருக்கிறது! என்று தாறுமாறாக நம்மவரை கிண்டலடித்து விமர்சிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஏன்?........
எதிர்வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகி வருகிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி. இதுவரையில் மாநில, மண்டல மற்றும் மாவட்டத்தின் தலைமை பதவிகளில்தான் நபர்களை நியமித்திருந்தார் கமல். ஆனால், இந்த தேர்தல்களை எதிர்கொள்ள வசதியாக இப்போது மாநிலம் முழுக்க வட்டங்கள், மாவட்டத்தின் பிற அணிகள் என எல்லாவற்றையும் ஏகபோகமாக நிரப்ப முடிவெடுத்து, ஆணைகளை பிறப்பித்துவிட்டார்.


தலைமை வகுத்திருக்கும் இந்த தாறுமாறான ’வசூல் சட்டம்’ மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளைக் கடுப்பாக்கி இருக்கிறது. ’ஏற்கனவே லோக்சபாவுக்கு பின் உங்க கட்சிக்கு மவுசு மடங்கிப்போச்சு!ன்னு கிண்டலடிக்கிறாங்க. இதுல இவரு வேற வசூல் திட்டத்தை போட்டு கட்சியை அசிங்கப்படுத்துறார்’ என புலம்புகின்றனர்.
ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படாமல், அப்பல்லோவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய கமல், தன் குடும்பத்தினர் எடுக்கும் ஆரத்தி தட்டின் முன் தலைகுனிந்து நிற்கிறார்.
ஓ இதன் பெயர்தான் பகுத்தறிவு பணிவா!?
