புதிதாக நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை புதிதாக அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

சட்டப்பேரவையில் 110 விதியில் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி,  இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அற்விக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் புதிதாக தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை புதிதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், கள்ளக்குறிச்சி 33 வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களையும் சேர்த்து 35 மாவட்டங்களாக அதிரித்துள்ளன.