2019 லோக் சபா தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்  திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  இந்த ஆலோசனைக்கு கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் மற்ற முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த கூட்டத்தில்  சில நாட்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி  திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  திமுகவில் தற்போது கூட்டத்தில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விழாவில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்காக கரூரில் இருந்து அழைத்து வரப்பட்ட  அவருக்கு தனி ஹோட்டல் எடுத்து கொடுக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமல்ல ஆலோசனைக்கு கூட்டத்தில் கலந்துகொள்ள காலை செந்தில் பாலாஜியை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து வர கார் அனுப்பப்பட்டு இருந்தது. ஹோட்டலிலிருந்து அழைத்துவரப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அறிவாலய வாசலிலேயே திமுகவினரால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

ஏற்கனவே செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த அவருக்கு சிறப்பான மரியாதை கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.