new eps army started for edapadi palanisamy in twitter

ட்விட்டரில் கலக்கும் "இபுஎஸ் ஆர்மி"...!

சமூக வலைதளங்களில் பிரபலங்களுக்கு ஆர்மி உருவாக்கி அதன் மூலம் பெரும் சாட்டை செய்பவர்கள் அவரவர் ரசிகர்கள் தான்...

அந்த வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆர்மி என்னவென்றால் பிக் பாஸ் ஓவியாவிற்காக உருவாக்கப்பட்ட ஆர்மி தான்...

Scroll to load tweet…

பிக்பாசில் கலந்துக்கொண்ட ஓவியாவின் இயல்பான அணுகுமுறைகள் அனைவரையும் கவர்ந்தது. இதனை தொடர்ந்து, ஓவியாவிற்கு அடுத்த படியாக திமுக துணைத்தலைவர் துரைமுருகனுக்கு தான் ஆர்மி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ஓவியா ஆர்மிக்கு பிறகு துரைமுருகன் ஆர்மி தான் மக்களிடேயே அதிகம் கவர்ந்த ஆர்மி.

துரைமுருகன் ஆர்மியில், மிகவும் சுவாரஸ்யமாக பேசக்கூடிய விஷயங்கள், நகைச்சுவை கலந்த பல உரையாடல்கள் என அனைத்தும் இடம் பெறுகிறது

இது குறித்து கருத்து தெரிவித்த, துரைமுருகன், ஓவியா ஆர்மிக்கு பிறகு எனக்கு தான் பெரிய ஆர்மி என பெருமையாகவும் ஜாலியாகவும் பேசினார்

இந்நிலையில் தான், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இபிஎஸ்ஆர்மி என தொடங்கப்பட்டு உள்ளது.

இதில் முதல்வர் கூறும் பல திட்டங்கள் அவருடைய் பேச்சு மற்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டரில் தொடங்கப்பட்ட இந்த ஆர்மி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.