திமுகவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இளைஞரணி செயலாளராக இருந்து வந்த மு.க ஸ்டாலின் அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்டம் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மு.பெ.சாமிநாதன் என்னும் வெள்ளகோவில் சாமிநாதன் புதிய இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இளைஞரணி து.செயலாளராக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் மகன் சுப.சந்திரசேகரன் நியமிகப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளர், திமுக பொருளாளர், என்ற மூன்று பதவிகளை கையில் வைத்திருந்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வெள்ளகோவில் சாமிநாதன் திமுக புதிய இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதிய இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் குடும்பத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவரான அன்பில் மகேஷ் பொறுப்பேற்பார் என கூறப்பட்ட நிலையில் சாமிநாதன் நியமிக்கப்ட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தனது பிறந்தநாளையொட்டி தனது அண்ணன் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது வீட்டிற்கே சென்று வாழ்த்து பெற்றிருப்பதால் கனிமொழி விரும்பிய பதவியும் அவருக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்கப்படுகிறது.