Asianet News TamilAsianet News Tamil

Ramadoss: எப்பாடு பட்டாவது அதை ஒழிக்கணும்.. முதல்வர் ஸ்டாலினுடன் கைகோர்த்து மாஸ் காட்டும் ராமதாஸ்.!

நீட் நுழைவுத்தேர்வு விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் சனிக்கிழமையன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

Neet issue.. Ramadoss welcomes all party meeting
Author
Tamil Nadu, First Published Jan 6, 2022, 1:27 PM IST

நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நீட் நுழைவுத்தேர்வு விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் சனிக்கிழமையன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு அளித்துள்ளார். 

Neet issue.. Ramadoss welcomes all party meeting

இதுதொடர்பாக பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை  நடத்துவதற்கான நீட் விலக்கு சட்டம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது!

Neet issue.. Ramadoss welcomes all party meeting

நீட் விலக்கு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கடந்த 25-ஆம் தேதியே வலியுறுத்தியிருந்தேன். அந்த வகையில்  தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க. பங்கேற்று ஆக்கப்பூர்வமாக பங்களிக்கும்!

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து எப்பாடு பட்டாவது விலக்கு பெற வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. அதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios