Asianet News TamilAsianet News Tamil

NEET All party meeting: சட்டமன்ற மாண்பை சீரழிக்கும் ஆளுநர்.. ஆர்.என் ரவியை கண்டம் பண்ணும் ஸ்டாலின் அரசு.

 திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பிரதமரை கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன், 

 

NEET All party meeting: The governor who is destroying the dignity of the assembly .. Stalin's government condemning RN Ravi.
Author
Chennai, First Published Jan 8, 2022, 12:32 PM IST

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாதது சட்டமன்ற மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது என்றும், நீட் விலக்கு பெற சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வி விலக்கு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் திமுக சார்பில் -  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக - விஜயபாஸ்கர், காங்கிரஸ் - செல்வபெருந்தகை, விசிக - சிந்தனைச் செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி - ஜி.கே.மணி, பாரதி ஜனதா கட்சி - வானதி சீனிவாசன், புரட்சி பாரதம் - பூவை ஜெகன் மூர்த்தி, 

NEET All party meeting: The governor who is destroying the dignity of the assembly .. Stalin's government condemning RN Ravi.

மனிதநேய மக்கள் கட்சி -  ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி - வேல்முருகன், மதிமுக - சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் - தளி ராமசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - நாகை மாலி உள்ளிட்ட 13 கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதற்கு தலைமையேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிராக உள்ளது என உரையாற்றினார்.மேலும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பிரதமரை கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வலியுறுத்தி உள்ளனர். 

NEET All party meeting: The governor who is destroying the dignity of the assembly .. Stalin's government condemning RN Ravi.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். ஆனால் அந்த சட்ட முன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார். சட்டத்தை நிறைவேற்றும் போது ஆளுநர் மதித்தி ஒப்புதல் அளிப்பது தான் மக்களாட்சியின் தத்துவம். நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனபதே அனைவரின் இலக்கு. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம் என்றார். பின்னர் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சி பிரதி நிதிகள் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க தயார் என உறுதி அளித்தனர்.

NEET All party meeting: The governor who is destroying the dignity of the assembly .. Stalin's government condemning RN Ravi.

அதைத் தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. பின்னர் அது குறித்து மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாதது சட்டமன்ற மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது, நீட் விலக்கு பெற சட்டப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும், மூத்த சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  பாஜகவை தவிர மற்ற 12 கட்சிகளும் நீட்விலக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளன, நீட் விலக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை மீண்டும் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும்,  ஏற்கனவே  அனைத்துக்கட்சி எம்பிக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்க மறுத்துள்ள நிலையில்,  நீட் விலக்கு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சரை தமிழ்நாடு அனைத்து கட்சி குழு சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios