Asianet News TamilAsianet News Tamil

மோடிக்கு தூதுவிட்ட 3 முக்கிய கட்சிகள்..! அதிர்ச்சியில் காங்கிரஸ்... துள்ளிகுதிக்கும் பாஜக..!

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்புவதாக ஒடிசாவைச் சேர்ந்த பிஜூ ஜனதா தளம் கட்சி பாஜகவிற்கு தூது அனுப்பியுள்ளது.

Naveen Patnaik allience PM Modi
Author
Tamil Nadu, First Published May 22, 2019, 10:29 AM IST

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்புவதாக ஒடிசாவைச் சேர்ந்த பிஜூ ஜனதா தளம் கட்சி பாஜகவிற்கு தூது அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தனிப்பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமராவார் என்று கூறப்பட்டு வருகிறது. அதேசமயம் தனிப் பெரும்பான்மை கிடைக்காது பாஜக கூட்டணி அரசை அமைக்கும் சூழல்தான் உருவாகும் என்று சில கணிப்புகள் கூறுகின்றன. இதனால் பாஜக மேலிடம் அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. Naveen Patnaik allience PM Modi

குறிப்பாக கடந்த காலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளை மீண்டும் கூட்டணியில் இணைக்க அமித்ஷா வியூகம் வகுத்து வருகிறார். அந்த அடிப்படையில் ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. இதனால் அந்தக் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

  Naveen Patnaik allience PM Modi

இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜகவை மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுவதால் பிஜு ஜனதா தளம் கட்சி தாமாக முன்வந்து பாஜக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் ஒடிசாவை ஆட்சி செய்துவரும் பிஜு ஜனதா தளம் தான் பெரிய அளவில் நலத்திட்டங்களை மாநிலத்திற்குக் கொண்டு வர முடியவில்லை.

 Naveen Patnaik allience PM Modi

எனவே இந்த முறை மத்தியில் அமையும் அரசில் அங்கம் வகித்து ஒடிசாவை முன்னேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற முடிவெடுத்துள்ளதாக பிஜு ஜனதா தளம் தலைவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் ஒடிசாவிற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் ஃபானிப்புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதி ஆகிய வாக்குறுதிகளை பாஜக அளிக்கும் பட்சத்தில் உடனடியாக பிஜூ ஜனதா தளம் கூட்டணியில் இணையும் என்கிறார்கள். Naveen Patnaik allience PM Modi

இதேபோல் தெலுங்கானா மாநிலத்தை ஆட்சி செய்துவரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக தெலுங்கானாவில் ஆட்சியில் இருந்தும் மத்தியில் அமைச்சர்கள் இல்லாததால் போதுமான திட்டங்களை மாநிலத்தில் அமல்படுத்த முடியவில்லை என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கருதுகிறார். எனவே அவரும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையக் கூடும் என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios