Asianet News TamilAsianet News Tamil

நடராஜனின் கர்வ அதிகாரத்தை துகிலுரிந்த ஜெ., சசி! மறக்க முடியாத ’கஞ்சா’ காலங்கள்.

Natarajan pride of power Unforgettable ganja periods
Natarajans pride of power Unforgettable ganja periods
Author
First Published Mar 20, 2018, 10:30 AM IST


எம்.என்.!
-    தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத வார்த்தை இது. அ.தி.மு.க. எனும் மிகப்பெரிய ஆளுமை இயக்கத்தின் நிழல் தலைவராக வாழ்ந்த மனிதர். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனும் மூன்று பெரிய தலைவர்களுடனும் அரசியல் செய்து பழகிய அரசு அதிகாரி.

Natarajans pride of power Unforgettable ganja periods

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா அரசியலில் பெரிய தலைக்கட்டாக உருவெடுக்கவும், அ.தி.மு.க.வை கைப்பற்றிடவும், முதல்வராக தனிப்பெரும் ஆளுமை காட்டிடவும் நடராஜனின் சாணக்கியத்தனங்கள் பெரிதும் கைகொடுத்தன என்பார்கள் தமிழக உள் அரசியலை அறிந்தவர்கள்.

ஜெயலலிதாவுக்கு நியாயப்படி நடராஜன் மீது மிகப்பெரிய மரியாதையும், நன்றியும் இருந்திருக்க வேண்டும். காரணம், ஆதரவற்று நின்ற தனக்கு, மனைவியையே சகோதரியாயக தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு நகர்ந்து நின்ற மனிதராயிற்றே. ஆனால் அவ்வளவு பெரிய விஷயத்தையும் தாண்டி ஜெயலலிதாவுக்கு நடராஜன் மீது வெறுப்பு ஏற்பட எது காரணம்? என்பது போயஸ் தோட்டத்து சுவர்கள் மட்டுமே தெரிந்த ரகசியம்.

Natarajans pride of power Unforgettable ganja periods

அட, நடராஜனை போயஸ் கார்டனுக்குள் கால் வைக்க கூடாது! என்று ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார் என்பதில் கூட பெரிய அதிர்ச்சி இல்லை. ஆனால் நடராஜனின் தோழியாக உருவகப்படுத்தப்பட்ட ‘செரீனா’ எனும் பெண் மீது ஜெயலலிதாவின் அரசு கஞ்சா வழக்கு பதிவு செய்து, சிறையிலடைத்து நடத்திய தாண்டவங்கள் இருக்கிறதே அப்பப்பா! ராம்கோபால் வர்மாவின் ஆக்‌ஷன் த்ரில்லர்களெல்லாம் பிச்சை எடுக்க வேண்டும் அந்த நிஜ சம்பவங்களுக்கு. அப்பேர்ப்பட்ட அதிரடி பிளாக்குகள் அவை.

ஜெரீனா, செரீனா என்றெல்லாம் அழைக்கப்பட்ட அந்த மதுரை மண்ணின் பெண் விவகாரத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து உறிந்தது நடராஜனின் தோள் சால்வையை மட்டுமல்ல, அதனுள் அவர் பொத்தி வைத்திருந்த ‘எம்.என்.’ எனும் அதிகார கர்வத்தையும்தான்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios