Asianet News TamilAsianet News Tamil

Kanimozhi: எங்கள் ஆட்சியிலேயே இப்படி ஒரு சம்பவமா? கவலையில் கனிமொழி..!

சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது என  திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

narikuravvar family issue...Kanimozhi worried
Author
Tamil Nadu, First Published Dec 10, 2021, 12:05 PM IST

சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது என  திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்திற்கு தினமும் வள்ளியூர் பகுதியில் இருந்து பேருந்தில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பலரும் குழுக்களாக வருவது வழக்கம். இவர்கள் நாகர்கோயில் பேருந்து நிலையத்தை சுற்றியும், பேருந்து நிலையத்திலும் ஊசி பாசி விற்பனை செய்வதோடு தினமும் மாலையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் வள்ளியூர் செல்வது வழக்கம்.

narikuravvar family issue...Kanimozhi worried

பொதுவாக மாலை நேரங்களில் இவர்களது குழுக்களுக்குள் ஒருவரை ஒருவர் திட்டி தகராறில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று திருநெல்வேலி பேருந்தில் பயணிக்க மூன்று குழுக்களாக ஏறியுள்ளனர். அதில் அவர்களுக்குள் சண்டையிட்டபடி சத்தமிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முகம்சுழித்த நிலையில் அவர்களை இறக்கி விட நடத்துனரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் அவர்களை நடத்துனர் கீழே இறக்கி விட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை வெளியே நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்ததையடுத்து  ஓட்டுனர்‌ மற்றும்‌ நடத்துனரை பணிநீக்கம்‌ செய்து போக்குவரத்துக்கழம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது என  கனிமொழி கூறியுள்ளார். 

narikuravvar family issue...Kanimozhi worried

இதுதொடர்பாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. 

சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூக நீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும் என கனிமொழி கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios