Asianet News TamilAsianet News Tamil

நரேந்திர மோடி ஒரு  மிகப் பெரிய பொய்யர்...மக்கள் பிரச்சனைகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் ...பின்னிப் பெடலெடுக்கும் ராஜ் தாக்ரே !!!

Narendra modi is a lier... Raj thakrey
Narendra modi is a lier... Raj thakrey
Author
First Published Oct 7, 2017, 6:26 AM IST


நரேந்திர மோடி ஒரு  மிகப் பெரிய பொய்யர்...மக்கள் பிரச்சனைகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் ...பின்னிப் பெடலெடுக்கும் ராஜ் தாக்ரே !!!

மோடியைப் போன்ற பொய்யரை என் வாழ்நாளில் தான் சந்தித்ததே கிடையாது   என்றும்,  அவர் இன்னும்     எத்தனை  காலத்துக்குத்தான் பொய் சொல்லிக் கொண்டே  இருப்பார் என்றும்  சிவசேனா தலைவர் ராஜ் தாக்ரே மிகக் கமுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பாஜ.க.வின்  கூட்டணி கட்சியான சிவசேனா மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கி விமர்சனம் செய்து வருகிறது. மோடி  தன்னை திருத்திக் கொள்ளவில்லை என்றால்  அக்கட்சிக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்ளப் போவதாக  சிவசேனா எச்சரித்துள்ளது.

அண்மையில்  மும்பை  ரெயில்வே மேம்பாலத்தில் நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானதை கண்டித்து சிவசேனா சார்பில்  பேரணி நடைபெற்றது . இதில்   பங்கேற்றுப் பேசிய  சிவசேனா தலைவர் ராஜ்தாக்கரே , நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று நம்பித்தான் அவருக்கு சிவசேனா ஆதரவு அளித்தது. ஆனால் கடந்த 3½ ஆண்டுகளில் நாடு எந்தவொரு வளர்ச்சியையும் அடைந்ததாக தெரியவில்லை என குற்றம் சாட்டினார். மோடியை நாங்கள் நம்பினோம். ஆனால் அவர் நமக்கு துரோகம் இழைத்து விட்டார் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

மோடியைப் போன்ற பொய்யரை தன் வாழ்நாளில்  சந்தித்ததே கிடையாது என்றும்,  மோடி பேசினாலே மக்கள் டி.வி.யை அணைத்து விடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதே போல் ரேடியோவை ஆன் செய்தால் ‘மான்கி பாத்’ என மோடி பேசுகிறார். இதைக் கேட்டு மக்கள் விரக்தி அடைந்து விடுகிறார்கள். அவர் எவ்வளவு காலத்துக்குத்தான் பொய் சொல்லிக் கொண்டே இருப்பார் என ராஜ்  தாக்ரே கேள்வி எழுப்பினார்.

மோடியை இந்த நாடே நம்பியது. மோடி  மீது  மக்கள்   நம்பிக்கை    வைத்தார்கள். மோடிக்கு  வாக்களித்தார்கள். மோடி வாக்குறுதி அளித்தார்.  ஆனால் மக்கள் இப்போது  அவர் ஒரு பொய்யர் என்பதை உணரத் தொடங்கி விட்டனர் என்று அவர் பேசினார்.

கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வந்து ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி கூறினார். ஆனால் அமித்ஷா அது தேர்தல் யுத்தி என்று இப்போது சொல்கிறார். இப்படி இரண்டு பேரும் பொய் சொல்லியே நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என ராஜ் தாக்ரே கிடுமையாக தாக்கிப் பேசினார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios