Nanjil sampath speak about Ex. chief Minister OPs
அதிமுக உடையவில்லை என்றும், ஒரே அணியாகத்தான் உள்ளது என்றும் தெரிவித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், ஆட்சியையும், கட்சியையும் காட்டிக் கொடுத்தவன் ஓபிஎஸ் என்று தரம் தாழ்ந்து பேசியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் உருவாகியது.சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதையடுத்து, டி.டி.வி.தினகரன், அதிமுகவுக்கு தலைமையேற்றார்.
ஆனால் அவரும் சிறை சென்றதையடுத்து இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி நடைபெற்றது. ஆனால் இரு அணிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள். ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.
‘இதனால் இணைப்பு முயற்சி தோல்வி அடைந்தததோடு மட்டுமல்லாமல், இதற்காக அமைக்கப்பட்ட குழுவையும் ஓபிஎஸ் கலைத்துவிட்டதாக அறிவித்தார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த நாஞ்சில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை மிகவும் தரம் தாழ்ந்து பேசியது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், அதிமுக உடையவில்லை என்றும் டி.டி.வி.தினகரனின் தலைமையில் அக்கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி என்பதெல்லாம் தேர்தல் ஆணையத்துக்குத் தான் என்றும் எங்களுக்கு ஒரே அணிதான், அது அதிமுகதான் என்றார்.
இந்த பிரிவுக்கு காரணம் ஓபிஎஸ் தான் என்றும், அவர் ஒரு பொறம்போக்கு, கட்சியையும், ஆட்சியையும் காட்டிக் கொடுத்தவன் என்றும் மிக தரக்குறைவாக பேசினார்.
