அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, அக்கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சசிகலா முதலமைச்சராக பதவியேற்பதால் சபிக்கப்பட்ட மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெறுவார்கள் என்றும், நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

மேலும், வீட்டு வேலை செய்தவர்கள், முதலமைச்சர் ஆகலாமா என்ற மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சேதாரம் இல்லாமல் அதிமுகவை கட்டி காத்ததே, சசிகலாவின் வெற்றி என்று பெருமிதப்பட்டார் நாஞ்சில் சம்பத்.

இனி தமிழகத்தில் நல்லாட்சி நடக்கும். மீண்டும் ஒருமுறை, தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார் நாஞ்சில் சம்பத்.