தனியார் விடுதியில் இளம்பெண்ணுடன் நாஞ்சில் சம்பத் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக  நாஞ்சில் சம்பத் கூறுகையில் அமமுகவில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியில் இணைகிறார்களோ அவர்களை குறிவைத்து இதுபோல வீடியோ வெளியாகி வருவதாக கூறியுள்ளார். 

சமூகவலைதளம் பல நேரங்களில் ஆக்கபூர்வமாக செயல்பட்டாலும் சில நேரங்களில் மிகப்பெரிய அதிகாரங்களில் இருப்பவர்கள் முதல் சாதாரண நபர்கள் வரை அந்தரங்க வீடியோ காட்சிகள் என குறிப்பிட்டு உண்மையோ பொய்யோ குறிப்பிட்ட நபர்கள் டார்கெட் செய்து முடிந்து விடுகிறது. அந்த வகையில் நாஞ்சில் சம்பத்துக்கு முன்பு சிக்கியவர்கள் திமுகவை சேர்ந்த பிரசன்னா அவரது வீடியோ இன்று இணையதளத்தில் பரவியது. ஆனால், அவர் அதை மறுத்ததுடன் இது தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்திருந்தார். தற்போது முன்பை போல பிரசன்னாவால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. 

தற்போது நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட நாஞ்சில் சம்பத் வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. ஆனால், அதனை நாஞ்சில் சம்பத் திட்டவட்டமாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தற்போது ஏன் இதுபோன்ற வீடியோக்கள் வெளியாகிறது என்ற தகவலும் கசிந்துள்ளது.

யாரெல்லாம் அமமுகவில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியில் இணைகிறார்களோ அவர்களை குறிவைத்து வீடியோ வெளிவருகின்றன என்றும், முதலில் தங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ புகழேந்தி வீடியோ தற்போது நாஞ்சில் சம்பத்தை குறிவைத்து வீடியோ என அனைத்தும் இதற்கு உதாரணம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.