nanjil sampath criticize palanisamy lead government

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசை கேடுகெட்ட அரசு என தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.

தலைமை செயலகத்திலும் ராம மோகன ராவ் வீட்டிலும் நடந்த வருமான வரி சோதனையின்போது துணை ராணுவப்படையினர் பயன்படுத்தப்பட்டனர். ஆனால், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த சோதனையின்போது தமிழக காவல்துறையினர்தான் பயன்படுத்தப்பட்டனர். 

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்றுவதாக தெரிவித்துவிட்டு அங்கு சோதனை நடத்த, பழனிசாமி தலைமையிலான கேடுகெட்ட அரசு, மத்திய அரசுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளது என விமர்சித்தார்.

ஜெயா டிவியில் பேட்டியளித்த துரைமுருகன், பழனிசாமி அரசு மீது முன்வைத்த விமர்சனங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், பழனிசாமி தலைமையிலான அரசை யார் விமர்சித்தாலும் வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.