ஆர் கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதை யடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆர் கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக அனைத்து கட்சியினரும் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கொடுத்து வந்தன.

இந்நிலையில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகம், எம்எல்ஏ விடுதியில் விஜயபாஸ்கரின் அறை மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

மேலும் ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா செய்துள்ளது தொடர்பான ஆவணங்களும் சிக்கின. இதையடுத்து சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட விக்ரம் பத்ரா மற்றும் தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானியுடன் தேர்தல் ஆணையர் கலந்தாலோசனை செய்தார்.

அதன்படி தேர்தல் விதிமீறல்கள் ஆர்கே நகரில் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளதால் தேர்தலை ரத்து செயவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வில்லை என்று கூறியுள்ளார். மேலும் யாரோ அவர்களை ஆட்டி வைப்பதாகவும் அதற்கு அவர்கள் ஆடிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆர் கே நகர் இடைத்தேர்தல் ரத்தானது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள அன்பழகனிடம் நமக்கு தொலைபேசியில் பேசியபோது அவர் கூறியதாவது…

எங்களுக்கு (அதிமுக) மடியில் கனம் இல்லை வழியில் பயம் இல்லை என்றார். ஆர் கே நகர் தேர்தல் தள்ளி வைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எப்போது நடந்தாலும் அம்மா கட்சிதான் வெற்றி பெருவது உறுதி என்று தெரிவித்தார்.