உள்ளாட்சித் தேர்தலுக்காக மீண்டும் திமுக உச்சநீதிமன்றம்  செல்கிறது அது எங்கள் ஆட்டம் இல்லை - உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவித்தாலும் நாங்கள் போட்டியிடுவோம் இதுவே எங்கள் ஆட்டம்  என சீமான் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ,  ஒரே ஊர்க்காரர் என்பதால் கமலுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்காகவே சந்தித்தேன் அது ஒரு மரபு ,  ஆதரவு என்றால் இருவரும் சேர்ந்து கூட்டணி அமைத்து இருப்போம் . அதனால் கமலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.  

திமுக ஏற்கனவே உச்சநீதிமன்றம் சென்றது இந்த ஆட்டத்தில் நாங்கள் இல்லை நாங்கள் தேர்தல் அறிவித்தால் போட்டியிடுவோம் அதுதான் நமது ஆட்டம் . காரை ஏற்றுமதி செய்வது உணவு பொருட்களை இறக்குமதி செய்வார்கள் இது பேராபத்தை ஏற்படுத்தக்கூடும், சொந்த நாட்டை பட்டினி போட்டுவிட்டு அடுத்த நாட்டிற்கு வெங்காயம் எவ்வாறு ஏற்றுமதி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. பெட்ரோலை விட வெங்காயம் விலை அதிகரித்துவிட்டது, ஒவ்வொரு முறையும் இந்த பற்றாக்குறையை நாம் சந்திக்கிறோம். 

தலைக்கவசம் மாட்டிக்கொண்டு வெங்காய வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக கிடைக்கும் என்று விளம்பரம் வந்துவிட்டது இதை குறித்து இந்த அரசாங்கம் கவனம் செலுத்துவது இல்லை உணவு உற்பத்தியை பற்றி சிந்திப்பது கிடையாது  150 கோடி மக்களை வைத்துக்கொண்டு உணவு அளிப்பதை பற்றி அரசு சிந்திக்கவே இல்லை 100 கோடி மக்களுக்கு கார் மற்றும் செல்போன் கொடுப்பதற்கு திட்டம் உள்ளது . நீரும் சோறும் கொடுப்பதற்கு திட்டங்கள் எதுவும் இல்லை எந்த நிதிநிலை அறிக்கையிலும் வரைவு இல்லை . 

பிரச்சனை என்றால் சாதி மதம் ஆகியவற்றை எடுத்துக் கொள்வார்கள். பொங்கல் பரிசு கொடுப்பது தேர்தலில் வாக்கு வாங்குவதற்காக மட்டுமே பொங்கல் பரிசு என்பது மறைமுக கையூட்டு தான் நமக்கு தேவையான அளவு மழை பொழிகிறது ஆனால் நீரை தேக்கி வைப்பதற்கான நீர்நிலைகள் சரிவர பராமரிப்பது இல்லை. இந்த நிலையில்தான் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை என்பதற்கு மிகப்பெரிய காரணம் குளங்களை வெட்டுங்கள் என்று கூறினால் ஆற்றினுள் குளங்களை வெட்டி விட்டார்கள் அதுவே காரணம்.