Asianet News TamilAsianet News Tamil

வருமானவரித் திருடன் விஜய்! கதைத்திருடன் கள்ளக்குறிச்சி முருகதாஸ்! தயாரிப்பாளரையும் அசிங்க அசிங்கமாக விமர்சித்த நமது அம்மா!

சர்கார் திரைப்படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் இலவச திட்டங்களையும் விமர்சித்திருப்பதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா கடுமையாக தாக்கி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Namadhu Amma Article about Sarkar
Author
Chennai, First Published Nov 9, 2018, 4:49 PM IST

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான சர்கார் திரைப்படத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அரசின் நல திட்டங்கள், மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   திரையிடப்பட்ட திரையரங்குகளில்  பேனர்களைக் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனிடையே நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான “நமது அம்மா” நாளேடு கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளது:

கோடிச்
சிங்கத்தின்
தைரியம்
குடியிருக்கும்

வீரத்
திருமகளின்

திவ்யப்
பிரபந்த

திருவாய்
மொழி
திருப்
பெயரையும்

அந்த
தெய்வீகத்
தாயின்

கனவுளத்
திட்டங்களையும்

மலிவாக
சித்தரித்து

கதைத்திருடன்
கள்ளக்குறிச்சி
முருகதாஸ்
படம் இயக்கம்

இதற்கு

காசு பணம்
முதலீடோ

கேபிள்
திருடன்களான

கேடி பிரதர்ஸ்
என்றிருக்க

சுறாவில்
சுண்டலாகி
மெர்சலில் 
மெண்டலான

அதி மேதாவி
விஜய்

அஇஅதிமுக
என்னும்

ஆலவிருட்ச
இயக்கத்தையும்

அதன்
ஆக்ஸிஜனான
அம்மாவையும்

வங்கத்து
கடலோரம்
உறங்குகிற
சிங்கத்தாய்
வந்தெழுந்துவிட
மாட்டார்
என்னும்
நம்பிக்கையில்

வம்புக்கு
இழுத்து

வாய்ச்சவடால்
அடித்திருக்கிறார்


மேடும் பள்ளமும்
மேல் மட்டமும்
கீழ்ம்ட்டமும் என

பெருகிக்
கிடக்கிற
பொருளாதார
ஏற்றத்தாழ்வை

சமன்படுத்தி
சீர் செய்ய

எல்லாரும்
எல்லாமும்
பெறவேண்டும்
என்னும்

உற்றநிலை
உருவாக்க

உளமார்ந்த
நல்
எண்ணத்தால்

கழக அரசு
வகுத்திட்ட
கருணை மனத்
திட்டங்களை

இலவசம்
என்னும்
ஒற்றைச்
சொல்லால்

இழிவு செய்ய
முனைந்திருக்கு

அழிவுக்கு
காத்திருக்கும்
அக்கிரமக்
கும்பல் ஒன்று


அம்மி குழவி
கல்லுகளோடு

மல்லுக்கட்டிய
காலத்திலிருந்து

நம்குலப் 
பெண்களுக்கு

மிக்சி - கிரைண்டர்
ஃபேன் தந்து
அவர்களை

விஞ்ஞான
யுகத்திற்கு
அழைத்து வந்தும்

மச்சு வீட்டுப்
பிள்ளையின்
மடி கிடக்கும்
மடிக் கணினி

குச்சு வீட்டுப்
பிள்ளைக்கும்
கிடைத்திடவே

உள்ளங்கைக்குள்
உலகத்தை
அள்ளித் தந்ததும்

இடை நிற்றல்
இல்லா கல்விக்கு

மிதிவண்டி
சீருடைகள்
காலணிகள்
கணித
உபகரணங்கள்

எல்லாமும்
தந்து

கல்வி
ஒருவருக்கு
கிடைக்கப்
பெற்றால்

அவர்
எல்லாமும்
பெற்றவராவார்
என்னும்

சமூகநீதி
மலரவே

தொண்டாற்றும்
தூய நல்
இயக்கத்தை

சனங்களெல்லாம்
கொண்டாடி
வாழ்த்தும் போது

சர்கார்
எனும் பேரில்
படம் நடித்து

வருமானவரித்
திருடன் அதை
வசைபாடி
திட்டலாமோ

வெட்கம்
வெட்கம்... 
இப்படி காட்டமாக கட்டுரையை வெளியிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios