நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே 12 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில் 13-வது மாநகராட்சியாக நாகர்கோவில் மாநகராட்சி தரம் உயரத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு சார்ப்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே 12 மாநகராட்சி இருக்கும் நிலையில், நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக மாற்றமாகிறது.  கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் 150 இடங்களாக மாற்றப்படும் என்றார். எல்லைகள் சீரமைப்பு பணி முடிந்தவுடன் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.