naanthaan pa rajinikath trending in twitter

தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கம் போல தெளிவே இல்லாத கருத்துகளை சொன்னதால் ரஜினிகாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

144 தடை உத்தரவு நீக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் போது திடீரென தூத்துக்குடிக்கு ரஜினி வருகை தந்தார். அங்குமருத்துவமனையில் இளைஞர் ஒருவருடன் ரஜினிகாந்த் சிரித்தபடியே நடத்தும் உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், ரஜினி வந்த போதும் எந்த பரபரப்பும் இல்லாமல் படுக்கையில் இருந்து எழும் இளைஞர், ஆமா நீங்க யாருங்க? என ரஜினியிடம் கேட்கிறார். அதற்கு ரஜினி சிரித்துக் கொண்டே நான்தான்பாரஜினிகாந்த் சொல்கிறார்.அப்போது 100 நாள் போராடிய போது வராத நீங்க இப்ப ஏன் வந்தீங்க.. இவரு ரஜினிகாந்துன்னு எங்களுக்கு தெரியாதா? என அந்த இளைஞர் கேட்டுள்ளார்.

இந்நிலையில் அங்கு நான்தான்பாரஜினிகாந்த் என கேட்ட அந்த வார்த்தை தற்போது ட்விட்டரில் டிரென்ட் ஆகி வருகிறது.