எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பங்கேற்கும் கடைசி சட்டப் பேரவை கூட்டம் இதுதான் என்றும், அடுத்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது ஓபிஎஸ்தான் முதலமைச்சராக இருப்பார் எனவும்  மைத்ரேயன் எம்.பி. தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கியது. இன்று நிதியமைச்சரின் பதிலுரையின் முடிவடைந்ததது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கடைசி சட்டம்ன்ற கூட்டத் தொடர் இதுதான் என்று ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த பின் மைத்ரேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  ஜனநாயக நாட்டில்  எந்த ஒரு குடிமகனுக்கும் கருத்துக்களை சொல்வதற்கு உரிமை உண்டு என்றும், அதன் அடிப்படையில் தான் நடிகர் கமல்ஹாசன் தன் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார் என கூறினார்.

தொடர்ந்து பேசிய மைத்ரேயன்,  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பங்கேற்கும் கடைசி சட்டப் பேரவை கூட்டம் இதுதான் என்றும், அடுத்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின்போது ஓபிஎஸ்தான் முதலமைச்சராக இருப்பார் என அதிரடியாக தெரிவித்தார்.