Asianet News TamilAsianet News Tamil

காணாமல் போன காளை மாட்டு சிலையின் காது... தர்மசங்கடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்..!

புதுக்கோட்டையில் நினைவுச் சின்னமாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிறுவிய காளை மாட்டின் காதை காணவில்லை என்பதால் அவர் தர்ம சங்கடத்தில் இருக்கிறார். 

Mystery people damaged the Jallikattu bull idol at Pudukottai
Author
Tamil Nadu, First Published May 6, 2019, 2:34 PM IST

புதுக்கோட்டையில் நினைவுச் சின்னமாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிறுவிய காளை மாட்டின் காதை காணவில்லை என்பதால் அவர் தர்ம சங்கடத்தில் இருக்கிறார்.

Mystery people damaged the Jallikattu bull idol at Pudukottai

தமிழகத்தில் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. ஜல்லிக்கட்டுகளில் அதிகமான காளைகள் கலந்து கொண்ட பெருமையும் இந்த மாவட்டத்தையே சேரும். இதன் மூலம் ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.Mystery people damaged the Jallikattu bull idol at Pudukottai

இத்தகைய சிறப்பை போற்றும் விதமாக புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி அருகே புதுக்கோட்டை மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில், சீறிப்பாயும் காளையை வீரர் அடக்குவது போன்ற தோற்றத்தில் உலோக சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது.Mystery people damaged the Jallikattu bull idol at Pudukottai

இந்த ஜல்லிக்கட்டு காளையின் சிலையை கடந்த மார்ச் மாதம் கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்நிலையில் அந்த காளை சிலையின் ஒரு புறத்தில் உள்ள காதை மட்டும் மர்ம நபர்கள் உடைத்து எடுத்து சென்று விட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் காளை சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios