Asianet News TamilAsianet News Tamil

விஜயலட்சுமி புகார் குறித்து என் பொண்டாட்டியோ என் குடும்பமோ கவலைப்படல.. அசராத சீமான்..!

வயிறு காய்ந்து இருக்கும் போது வானில் சந்திராயன் எதற்கு என்ன சீமான் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் 80 கோடி ஏழை மக்கள் இருக்கிறார்கள். ஏழைகளுக்கு பசியாற்ற வேண்டும் எனக் கூறினார். தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் தராத காங்கிரஸிற்கு திமுக ஆதரவு அளிக்கிறது. 

My wife is not worried about Vijayalakshmi complaint,,, Seeman tvk
Author
First Published Sep 3, 2023, 2:26 PM IST

என்னைவிட அதிக வாக்குகள் அண்ணாமலை பெறுவார் என்றால் அதிமுக - பாஜக கூட்டணியே தேவையில்லையே என சீமான் கூறியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்;- தேர்தலில் யாருக்கு அதிக வாக்குகள் என்று நாடாளுமன்ற தேர்தலில் பார்த்துவிடுவோம். என்னைவிட அதிக வாக்குகள் அண்ணாமலை பெறுவார் என்றால் அதிமுக - பாஜக கூட்டணியே தேவையில்லையே. தமிழ்நாட்டில் பாஜக தனித்து நின்றே ஆட்சி அமைக்கலாமே? தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை தான் வெறுப்பு அரசியல் நடத்தி வருகிறார். மொழி, இன அரசியல் பேசுவது வெறுப்பரசியல் என்றால் கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை எதிர்த்து நீங்கள் பேசுவது விருப்பரசியலா? என்றார். 

இதையும் படிங்க;- திமுகவுக்கு ஆதரவு: சீமான் அந்தர் பல்டி!

My wife is not worried about Vijayalakshmi complaint,,, Seeman tvk

வயிறு காய்ந்து இருக்கும் போது வானில் சந்திராயன் எதற்கு என்ன சீமான் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் 80 கோடி ஏழை மக்கள் இருக்கிறார்கள். ஏழைகளுக்கு பசியாற்ற வேண்டும் எனக் கூறினார். தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் தராத காங்கிரஸிற்கு திமுக ஆதரவு அளிக்கிறது. முதலில் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரியில் தண்ணீர் வாங்கி தர வேண்டும். ரபேல் விமானத்தை ஏன் பிரான்சில் வாங்குகிறார்கள்?? அதே பிரான்ஸ் நாட்டினர் மற்ற நாட்டுகளுக்கும் விமானத்தை விற்பனை செய்து வருகிறார்கள். இதில் இந்தியா ராணுவம் பாதுகாப்பு எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க;-  விஜயலட்சுமி புகாரால் என்னை கைது செய்ய திட்டமா.? எந்த சம்மனும் வரவில்லை... நானே சென்னை வருகிறேன்- சீமான் அதிரடி

My wife is not worried about Vijayalakshmi complaint,,, Seeman tvk

திமுக, அதிமுக உடன் நடப்பது பங்காளி சண்டை. அண்ணன் தம்பி சண்டை. ஆனால் இதில் பாஜக எதற்கு தலையீடுகிறது. பாஜக இந்தியா நாட்டை பிச்சைகாரர் நாடாக ஆக்கிவிட்டது. தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பது தான் என்னோடு கொள்கை. சாதி, மதம் உணர்வு சாகும் போது தமிழ் இனம் தானாக வளரும். மொழி பற்று இனப்பற்று வரும் போது சாதி பற்று மறைந்துவிடும். தமிழ் நாட்டில் எத்தனை தெருவில் தமிழில் பெயர் உள்ளது என கேள்வி எழுப்பினார்.

My wife is not worried about Vijayalakshmi complaint,,, Seeman tvk

எனக்கும் விஜயலட்சுமி-க்கும் திருமண ஆயிருந்தால் போட்டோவை வெளியிட வேண்டும். குற்றச்சாட்டை ஆதாரத்துடன் விஜயலட்சுமி நிரூபிக்கவேண்டும்.  2013-ம் ஆண்டு புகார் அளித்தார். அப்புறம் விஜயலட்சுமி எங்க போனார் என கேள்வி எழுப்பினார். அதன் பிறகு 2021-ம் ஆண்டு தேர்தலின் போதும் தற்போது 2024-ம் ஆண்டு தேர்தல் வர 6 மாதங்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்படுத்துகிறார். விஜயலட்சுமி புகார் குறித்து என் மனைவியோ குடும்பமோ கூட கவலைப்படவில்லை என சீமான் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios