Asianet News TamilAsianet News Tamil

எனது பிரதமர் மோடி;முதல்வர் பழனிச்சாமி கலகலக்கும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பேட்டி.!

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் இல்லாத தேர்தலை சந்திக்க போகிறோம். யாருக்கு ஒட்டு போடுவது என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். இந்த தேர்தல் எப்படி இருக்கும் என்பது அரசியல் நிபுணர்களுக்கு தான் தெரியும்.எனக்கு பிரதமர் மோடி  முதல்வர் பழனிச்சாமி என பேசியதற்கு விளக்கமளித்திருக்கிறார் குஷ்பு. 
 
My Prime Minister Modi; Chief Minister Palaniachai, Congress spokesperson Khushbu ..!
Author
Tamil Nadu, First Published Oct 9, 2020, 9:09 AM IST

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் இல்லாத தேர்தலை சந்திக்க போகிறோம். யாருக்கு ஒட்டு போடுவது என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். இந்த தேர்தல் எப்படி இருக்கும் என்பது அரசியல் நிபுணர்களுக்கு தான் தெரியும்.எனக்கு பிரதமர் மோடி  முதல்வர் பழனிச்சாமி என பேசியதற்கு விளக்கமளித்திருக்கிறார் குஷ்பு. 

My Prime Minister Modi; Chief Minister Palaniachai, Congress spokesperson Khushbu ..!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, “டெல்லியின் அரசியல் சூழ்நிலை நன்றாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொல்வதில் தவறு இல்லை. நான் வேறு கட்சியில் இருந்தாலும் அவர் எனக்கு முதலமைச்சர் தானே. நான் தமிழகத்தில் தான் உள்ளேன். அவர்கள் கட்சியில் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து சொல்லி உள்ளேன். இதில் தவறே இல்லை. மோடி, அமீத்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நான் வேறு கட்சியில் இருந்தாலும் எனக்கு சேர்த்து தான் பிரதமர், உள்துறை மந்திரி, முதலமைச்சர். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

My Prime Minister Modi; Chief Minister Palaniachai, Congress spokesperson Khushbu ..!

2021ம் ஆண்டு தேர்தல் ஒரு மாறுபட்ட தேர்தலாக இருக்க போகிறது. திமுகவில் கருணாநிதி, அதிமுகவில் ஜெயலலிதா ஆகியோர் இல்லாத தேர்தலாக இருக்கும். இரு கட்சிகளுக்கும் புதிய தேர்தலாக இருக்கும். மக்கள் முதன்முறையாக 2 தலைவர்கள் இல்லாத தேர்தலை பார்க்க போகிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் இல்லாத தேர்தலை சந்திக்க போகிறோம். யாருக்கு ஒட்டு போடுவது என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். இந்த தேர்தல் எப்படி இருக்கும் என்பது அரசியல் நிபுணர்களுக்கு தான் தெரியும்.

My Prime Minister Modi; Chief Minister Palaniachai, Congress spokesperson Khushbu ..!

கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு அரசு மட்டும் காரணம் கிடையாது. மக்கள் எத்தனை பேர் முகக் கவசத்துடன் செல்கின்றனர்? எத்தனை பேர் சமூக இடைவெளியை கைப்பிடிக்கின்றனர்? அரசுகள் சரியாக செய்யவில்லை என்று எதிர்கட்சியில் இருக்கும் போது எளிதாக சொல்லி விடலாம். உலக சுகாதார மையம், அரசுகள் சொல்லும் வழிமுறைகளை எத்தனை பேர் கைப்பிடிக்கின்றனர். சமூக அக்கறை அனைவருக்கும் இருக்கிறது. எளிதாக சொல்லிடலாம். அதை நாம் எப்படி கட்டுபடுத்துகிறோம் என்பதும் இருக்கிறது.பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது குற்றம் கிடையாது. தமிழகத்தில் பெரியாரை மிகப்பெரிய தலைவராக அனைவரும் கொண்டாடுகின்றனர். ஒரு அரசியல் வட்டத்திற்குள் பெரியாரை அடைக்காமல் எல்லாரும் மாலை போடலாம். பெரியாரை அரசியலாக்குவதை நான் விரும்பவில்லை.

My Prime Minister Modi; Chief Minister Palaniachai, Congress spokesperson Khushbu ..!

மார்க்கண்டேய கட்ஜு முகநூலில் என்ன சொல்லி இருக்கிறார் என்று எனக்கு தெரியாது. இதுவரை அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. அவருக்கு எப்படி பதில் சொல்வது. ஒவ்வொருக்கும் ஒரு கருத்துகள் இருக்கும். அதற்கு பதில் அளித்தால் சண்டை தான் வரும். ஜனநாயக ரீதியாக கருத்து சுதந்திரம் இருக்கிறது. கருத்துக்களை கேட்டுவிட்டு போய்விட வேண்டும். அதை விட்டு சண்டை போட்டுக் கொண்டு இருந்தால் நிம்மதி இருக்குமா?

My Prime Minister Modi; Chief Minister Palaniachai, Congress spokesperson Khushbu ..!

வதந்திக்கும் எனக்கும் தூரத்து சொந்தம் கிடையாது. ஆனால் பக்கத்து சொந்தம். வதந்திகள் எனக்கு பழகிவிட்டது. வதந்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. விசயம் இல்லாத வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது. டெல்லி செல்லும் முன் காங்கிரஸ் மேடையில் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தேன். அதன் பின் காங்கிரசில் இருப்பேனா? என்ற கேள்வியை கேட்கலாமா? தேர்தலில் போட்டியிடுவேனா? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். போட்டியிட வாய்ப்பு கேட்டு நான் பேசுவதில்லை. என் சார்பாக யாரும் பேசுவதும் இல்லை. கட்சி, கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வேலைகளை செய்வேன்” எனக் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios