தமிழக உளவுத்துறையினரால் எனது தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுகிறது.. அண்ணாமலை பகீர்.

காவல்துறை மூலம் எனது  தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் உளவுத்துறை காவல்துறையை அதிகாரம் செய்கிறது. உளவுத் துறை adgp  காவல்துறையை கையில் எடுத்து, அவரே காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.

My phone conversation is being tapped by the Tamil Nadu Intelligence .. Annamalai Shocking.

காவல்துறை மூலம் தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகீர் தெரிவித்துள்ளார். தமிழக உளவுத்துறை காவல்துறையை அதிகாரம் செய்கிறது என்றும், உளவுத்துறை டிஜிபி காவல்துறையை கையில் எடுத்து அவரே காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார் என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

பத்தாண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் இது ஒருபுறம் இருந்தாலும் மாநில சட்டம் ஒழுங்கு என்பது தமிழக அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் தமிழகத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் பழிவாங்கும் கொலைகள் அரங்கேறி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதனால் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு 3 ஆயிரத்துக்கும் அதிகமான  குற்றப் பின்னணி உள்ளவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

My phone conversation is being tapped by the Tamil Nadu Intelligence .. Annamalai Shocking.

ஆனாலும் தமிழக காவல்துறை மீதான விமர்சனங்கள் தொடர்கிறது. அதிலும் குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறை திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் விமர்சித்து வருகிறார்.காவல்துறை அரசின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில்தான் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அதிகாலை ஒன்றரை மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. வாகனத்தில் வந்த 2 பேர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். கட்டடத்தின் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அது தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதல் தற்போது நடந்திருக்கிறது என்றும், தமிழ்நாட்டின் தலைநகரிலேயே பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது இது தமிழக சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்திருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு :- பெட்ரோல் குண்டு வீசிய நபர் நீட் நிலைப்பாட்டை கண்டித்து குண்டு வீசியதாக கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வரானவுடன் ரவுடிகளுக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பாஜகவிற்கு ஊக்கம் தருகிறது, காரணம் கட்சி வளர்கிறது என்று அர்த்தம், நேற்று மாலை முதல் நாகையில் பாஜக பொறுப்பாளர்களின் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. சென்னை வார்டு 75 , திருப்பூர் வார்டு 44,  வேலூர் வார்டு 52 பணிமனைகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்நிலையில்தான் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது இது குறித்து NIA விசாரிக்க வேண்டும். 

My phone conversation is being tapped by the Tamil Nadu Intelligence .. Annamalai Shocking.

முதல் தகவல் அறிக்கை பதிவதற்குள் காவல்துறை குண்டு வீச்சின் தடயங்களை அழித்துள்ளது. குற்றவாளியின் வாக்குமூலம்  சினிமா போலிஸ் வசனம் போல உள்ளது. காவல்துறையின் Super sonic speed -ஐ இந்த விசாரணையில்தான் பார்த்திருக்கிறோம். பாஜகவில் காலம் , காட்சி, தலைவர்கள் மாறி விட்டனர். இதுபோன்ற விசயங்களால் பயப்பட மாட்டோம்.  15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் Y ல் இருந்து X பாதுகாப்பாக எனது பாதுகாப்பை குறைக்கப்பட்டுள்ளது . துப்பாக்கி ஏந்திய ஒரு காவலர் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருக்கிறார். கட்சி அலுவலகத்தின் பாதுகாப்பும் குறைகப்பட்டுள்ளது.

காவல்துறை மூலம் எனது  தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் உளவுத்துறை காவல்துறையை அதிகாரம் செய்கிறது. உளவுத் துறை adgp  காவல்துறையை கையில் எடுத்து, அவரே காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். பிறகு டிஜிபி பதவி ஏன் இருக்கிறது? இதற்கு முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும். காவல்துறை அரசியல்மயமவதற்கு உதாரணம் இதுதான் , உளவுத்துறை தலையீட்டால்தான் லாவண்யா மரணத்தில் காவல் கண்காணிப்பாளர்கள் முறையாக விசாரிக்கவில்லை. சட்ட விரோதமாக எனது தொலைபேசி உரையாடல் தமிழக உளவுத்துறையினர் மூலம்  ஒட்டுக்கேட்கப்படுகிறது. மத்திய விசாரணை அமைப்புகளிடம் இதுபற்றி புகாரளிக்க உள்ளேன். குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தேசிய தலைவர்களிடம் கூறியுள்ளோம். 

My phone conversation is being tapped by the Tamil Nadu Intelligence .. Annamalai Shocking.

குண்டு வீச்சு சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.கருத்தை கருத்தாக இல்லாமல் வன்முறையில் எதிர்கொள்ள நினைத்தால் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். Democratic state என்பதிலிருந்து police state ஆக தமிழகம் மாறி வருகிறது. காவல்துறை  Police dominant intelligence ஆக இருக்க வேண்டும், ஆனால் Intelligence dominate police state ஆக தமிழகம் மாறி வருகிறது. தமிழக  உளவுத்துறை தலைவர் வாட்ஸ் அப் பதிவில் என்னை பற்றி காவல் துறை குழுவில் பதிந்துள்ளார். அதுபற்றிய screen shot என்னிடம் உள்ளது என்று கூறினார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios