"இளங்கோ உன்னை நினைத்து பார்க்கவே என் உள்ளம் அஞ்சி நடுங்குகிறது".. தலையில் அடித்து கதறும் ஸ்டாலின்.
இரங்கல் செய்தி பின்வருமாறு:- கழகத்தின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. என்.ஆர்.இளங்கோ அவர்களின் அன்புமகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு - மிகுந்த வேதனைக்கும் - சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானேன். ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகனை இழந்து வாடும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவின் சூழ்நிலையை நினைத்து பார்க்கவே என் உள்ளம் அஞ்சி நடுங்குகிறது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இளங்கோவின் அன்பு மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு தன் மனம் மிகுந்த வேதனைக்கு ஆளானது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோர விபத்து:
திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் என்.ஆர் இளங்கோ தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவரது மகன் ராகேஷ் வேலை நிமித்தமாக தனது நண்பர்களுடன் கார் மூலமாக சென்னையில் இருந்து புதுச்சேரி புறப்பட்டார். இந்நிலையில் அதிகாலை சுமார் 3:30 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த கே புதூர் அருகே சென்றபோது கார் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இள்கோ மகன் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் விகாஷ் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகேஷ் பயணித்த கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
காரில் சிக்கிய உடல்:
காரின் இடர்பாடுகளுக்குள் சிக்கிய அவரது உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் மீட்டனர். ஜேசிபி இயந்திரம் உதவியோடு காரின் பாகங்களை அறுத்து எடுத்து உடலை மீட்டனர். காலை 7 மணி அளவில் உடல் மீட்கப்பட்டது பின்னர் பிரைத பரிசோதனைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் திமுக தொண்டர்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திமுகவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்களை பதிவு செய்துள்ளார்.
வேதனையில் முதல்வர் ஸ்டாலின்:
இரங்கல் செய்தி பின்வருமாறு:- கழகத்தின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. என்.ஆர்.இளங்கோ அவர்களின் அன்புமகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு - மிகுந்த வேதனைக்கும் - சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானேன். ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகக் குடும்பத்தில் ஒருவராக இருந்து பல்வேறு வழக்குகளில் கழகத்திற்காக வாதிட்டு வரும் திரு. என்.ஆர்.இளங்கோ அவர்களது சகோதரர் சமீபத்தில் மறைந்த நிலையில், அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். என்.ஆர்.இளங்கோ அவர்கள் எத்தகைய வேதனைக்கு ஆளாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே உடலும் உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது. அன்புக்குரிய மகனை இழந்து வாடும் திரு. என்.ஆர். இளங்கோவிற்கும்- அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.