Asianet News TamilAsianet News Tamil

என் தம்பி ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என துடிக்கிறார்.. சைதை பிரச்சாரத்தில் திமுகவை புரட்டி எடுத்த துரைசாமி.

மிக சிறந்த முதல்வராக வேண்டும் என்று எனது தம்பி ஸ்டாலின் ஆசைப்படுகிறார் என கேலியாக சிரித்தபடியே கூறிய சைதை துரைசாமி, காலம் காலமாக அதிமுக மக்கள் மனதில் நின்று ஆட்சி செய்து வருகிறது என்றார். 

My brother Stalin wants  to be the chief minister And he struggling for it. admk candidate Saidai Duraisamy Teasing.
Author
Chennai, First Published Mar 31, 2021, 9:42 AM IST

சென்னை சைதாப்பேட்டை தொகுதிகக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் வீடு வீடாக நடந்து சென்று வீதிவீதியாக மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் சைதை துரைசாமி ஈடுபட்டு வருகிறார், அந்த வரிசையில் நேற்று சென்னை வேளச்சேரி சாலை கண்ணிகாபுரம் பகுதியில்  32 தெருகளுக்கும் அவர் சென்று வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது மக்கள் அவருடன் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர். 

My brother Stalin wants  to be the chief minister And he struggling for it. admk candidate Saidai Duraisamy Teasing.

அப்போது, பிறந்த சில தினங்களே ஆன ஆண் குழந்தை ஒன்றுக்கு தன்னுடைய மகன் பெயரான வெற்றிச்செல்வன் என்ற பெயரையும் சூட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; மிக சிறந்த முதல்வராக வேண்டும் என்று எனது தம்பி ஸ்டாலின் ஆசைப்படுகிறார் என கேலியாக சிரித்தபடியே கூறிய சைதை துரைசாமி, காலம் காலமாக அதிமுக மக்கள் மனதில் நின்று ஆட்சி செய்து வருகிறது என்றார். ஒவ்வொரு மக்கள் நல திட்டங்களும் உருவானது அதிமுக ஆட்சியில்தான் என்பதை மக்கள் அறிவார்கள், ஆனாலும் தம்பி ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற கனவிற்காக அரசியலில் பல சாகசங்களை செய்து வருகிறார். 

My brother Stalin wants  to be the chief minister And he struggling for it. admk candidate Saidai Duraisamy Teasing.

கருத்துக்கணிப்பை பொறுத்த அளவில் ஊடகங்கள் தொடர்ச்சியாக திமுகவுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள். என்னைப் பொருத்தவரை இது கருத்துக்கணிப்பு அல்ல கருத்துத் திணிப்பு என்றே பார்க்கிறேன். 1980இல் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் இரண்டு தொகுதியைக் கைப்பற்றிய அதிமுக 1981ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி கண்டது. அதேபோல் 2021 அபார வெற்றியை காணும், அதிமுக வெற்றி கனியை எட்டும் என்றும் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios