ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவபடத்தை மர்ம நபர்கள் கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் பகுதியில் உள்ள 80 அடி சாலையில் சுமார் பதினைந்து வருடங்களாக முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவப்படம் உள்ளது.இந்த நிலையில் இன்று அதிகாலை அவரின் படம் கிழிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு ஒன்றுகூடினர். தகவலறிந்து வந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் புதிய முழு உருவப்படம் வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கோவை, ராமநாதபுரம் பகுதியில் முத்துராமலிங்க தேவரின் முழு உருவபடத்தை கிழித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
 
முத்துராமலிங்க தேவரின் உருவபடத்தை மர்ம நபர்கள் கிழித்தெறிந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.