ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் முழுவிவரத்தை தமிழக அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா உடல் நிலை பற்றி அரசு சார்பில் அறிக்கை வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு தனது கடமைப் பொறுப்பை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தியுள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அரசு அறிக்கை வெளியிட்டு இருந்தது. 

 அரசு அறிக்கை வெளியிட்டதால் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் மரணத்தில் சந்தேகம் எழவில்லை , ஆனால் ஜெயலலிதா விவகாரத்தில் இது இல்லாத்தால் தேவையற்ற சர்ச்சை எழுந்துள்ளது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.