மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் நடைமுறை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது. 

திருத்தங்களுடன் கூடிய முத்தலாக் தடை மசோதா மக்களவை இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மசோதாவை தாக்கல் செய்து பேசினார். அப்போது, "முத்தலாக் தடை மசோதா மதம், சமூகம், நம்பிக்கைக்கு எதிரானதல்ல. முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவே மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றம், சுயமரியாதைக்காகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. 20 இஸ்லாமிய நாடுகள் முத்தலாக்கிற்கு தடை விதித்த நிலையில், மதச்சார்பற்ற இந்தியா ஏன் தடை கூடாது?" என்று ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.

5 மணி நேரமாக கடும் விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவை எதிர்த்து அதுமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனையடுத்து எதிர்கட்சிகளில் திருந்தங்கள் அனைத்தையும் நிராகரித்து மக்களவையில் முத்தலாக் சட்ட மசோதா நிரைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா விரையில் நிறைவேற்றப்பட உள்ளது.  
 
புதிய மசோதாவின்படி முத்தாலக் முறை சட்டவிரோதமானது என்றும் உடனடி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.