கம்புத்தடிக்கும், துப்பாக்கிகளும் பயந்த கோழைகள் அல்ல முஸ்லீம்கள் என அய்யா தர்ம யுக வழி நிறுவனத் தலைவரான அய்யா வழி பாலமுருகன் எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் பேசினார். அப்போது அவர், ‘’இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். உங்கள் வேலையை பாருங்கள். மோடி, அமித்ஷாவுக்கு இது ஆட்யுட்கால பதவி அல்ல. அதேபோல இங்கே ஆட்சியில் இருக்கிற எடப்பாடிக்கும், ஓ.பிஎஸுக்கும் சொல்லிக்கொள்கிறோம்.  அதிமுக பாஜகவின் அடிமையாக இருந்து கொண்டு உங்களது வாழ்க்கையை அழித்துக் கொள்ள வேண்டாம். பாஜக அரசாங்கம் நாட்டை துண்டாடுவதற்காக காத்துக் கொண்டு இருக்கிறது. அதனை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் பாஜகவின் அடிமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்களுக்கு நியாயமே இல்லையா?

 

தமிழ்நாட்டில் ஒருபோதும் மக்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என மத்திய அரசுக்கு தெரிவியுங்கள்.  தெரிவித்தால் இந்த அரசியல் வரலாற்றில் அதிமுக ஆட்சி தொடரும். இல்லையென்றால் அதிமுக மட்டுமல்ல பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டிலேயே இருக்காது. எங்களுக்கு ஆயுதங்கள் மீது நம்பிக்கை இல்லை. இறைவன் மீது மட்டுமே நம்பிக்கை.  எங்கள் போராட்டம் அறவழிப்போராட்டம் எங்களை விட்டு விடுங்கள்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.