அசுரன் படத்தை பார்த்து மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து கருத்துப்பகிர்ந்தார். பதிலடியாக முரசொலி நிலமே பஞ்சமி நிலம் தான் என பற்ற வைத்தார் பாமக ராமதாஸ். இந்த விவகாரம் எஸ்.சி., எஸ்டி ஆணையம் வரை விசாரணைக்கு வந்து விட்டது. இந்நிலையில், முரசொலி பத்திரிக்கையில் பஞ்சமி நில பத்திரம் கேட்டது தொடர்பாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

 

அதில், ’’அந்துமணி:- ஏண்டி சிந்து; முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை ஆணையத்தில் காட்டவில்லை என்று மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே; பார்த்தியாடி!

சிந்துமணி:-’’அடியேய் அந்து; பார்த்தேண்டி; முரசொலி நிலம் பஞ்சமி நிலம் எனக் குற்றம் சாட்டியது அவர்; மூலப்பத்திரத்தை பார்க்காமலே எப்படி குற்றம் சாட்டினார்? ஆதாரம் காட்டக்கூடிய மூலப்பத்திரத்திர நகலை அவரே அரசிடமோ அல்லது இவரது பேச்சை நம்பி இதில் தலையிட்டு முகத்தில் கரியை பூசிக் கொண்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், சீனிவாசன் போன்ற பாஜகவினரிடமோ கொடுத்திருக்க வேண்டியது தானே! பாவம்; ஆப்பசைத்த குரங்கு நிலையில் அகப்பட்டுக் கொண்டு ‘கீச்... கீச்...’எனக் கத்திக் கொண்டிருக்கிறார்.... அவ்வளவு தான்!’’என பகடி செய்துள்ளது.