தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் மவுனம் கலைந்ததையடுத்து அரசியல் வானில் கொடிபறக்க தொடங்கியுள்ளது.

ஒருபக்கம் சசிகலா அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் வேளையில் மறுபுறம் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு பெருகுகிறது

பன்னீர்செல்வம் பேட்டியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றவுடன் முன்னால் அமைச்சர் கே.பி. முனுசாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏராளமான கட்சித்தொண்டர்கள், மாணவரணி, இளைஞரணி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் ஓ.பி.எஸ் இல்லம் முன்பு குவிந்து உற்சாகத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.

அங்கு குவிந்த தொண்டர்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கண்டெடுக்கப்பட்ட மாணிக்கம், ஜல்லிக்கட்டு நாயகன் பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆதரவாளர்கள் நடனமாடி புதிய உலகம் பிறந்தது போல் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர்.