Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் புரோ... ரஜினியை எதிர்க்க தெம்பிருக்கா...!

மகாபாரதத்தை முதலில் ரஜினி படிக்கட்டும் என்கிறார் கே.எஸ் அழகிரி. காஷ்மீர் பிரச்சனையில் மோடி- அமித்ஷாவை அண்ணன் ரஜினி புகழ்ந்ததை தலைவர் பா. சிதம்பரமும், அண்ணன் மு.க. ஸ்டாலினும் ஏன், எதுவும் சொல்லமாட்டேன்கிறார்கள்.?ரஜினிக்கு எதிராக அவர்களை பேசச் சொல்வாரா அழகிரி, 

mr. stalin do u have brave
Author
Chennai, First Published Aug 14, 2019, 2:26 PM IST

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியையும் ,அமித்ஷாவையும்  எதிர்க்கும் ஸ்டாலின் ,பா.சிதம்பரமும் அதை வரவேற்றுள்ள ரஜினியை மட்டும்  ஏன் விமர்சிக்க  தயங்குகின்றனர் என காங்கிரஸ் கட்சியின் மாவட்டசெயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

mr. stalin do u have brave

கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நடிகர் ரஜினிகாந்த் வெகுவாகப் பாராட்டினார், காஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷா, பிரதமர் மோடி எடுத்த  நடவடிக்கைகளுக்கு தலைவணங்குவதாக கூறி அமித்ஷா,மற்றும் மோடியை புகழ்ந்து தள்ளினார். இந்நிலையில் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும்  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பா. சிதம்பரமும் அறிக்கைகளின் மூலம் வருத்தெடுத்து வருகின்றனர்.mr. stalin do u have brave

காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் இது குறித்து ஸ்டாலினையும், பா.சிதம்ரத்தையும் கடுமையாக விமர்சித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார், அதில்,”மகாபாரதத்தை முதலில் ரஜினி படிக்கட்டும் என்கிறார் கே.எஸ் அழகிரி. காஷ்மீர் பிரச்சனையில் மோடி- அமித்ஷாவை அண்ணன் ரஜினி புகழ்ந்ததை தலைவர் பா. சிதம்பரமும், அண்ணன் மு.க. ஸ்டாலினும் ஏன், எதுவும் சொல்லமாட்டேன்கிறார்கள்.?ரஜினிக்கு எதிராக அவர்களை பேசச் சொல்வாரா அழகிரி, என குறிப்பிட்டுள்ள கராத்தே தியாகராஜன், திமுக தலைவர் முக ஸ்டாலினையும், பா, சிதம்பரத்தையும் வம்புக்கிழுத்துள்ளார் mr. stalin do u have brave

அதாவது ரஜினியை கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சுவதைப் போலவும்,  ரஜினியை எதிர்க்கும் துணிவு ஸ்டாலினுக்கு இல்லை என்பதைப் போலவும்  கராத்தேவின் டிவிட் அமைந்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் தான் மிகவும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர் பா.சிதம்பரம் என்றும், சிதம்பரத்தின் நம்பிக்கைக்குரிய விசுவாசிகளில் தானும் ஒருவன் என தன்னை காட்டிவந்த கராத்தே தற்போது ஸ்டாலினையும், பா.சிதம்பரத்தையும் , ரஜினிக்கு எதிராக கொம்புசீவும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.  mr. stalin do u have brave

 

இது கராத்தே தியாகராஜனின் சொந்த கருத்து போல் தெரியவில்லை, அவரை இப்படி பேசச்சொல்லி கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது எனவும், கராத்தே தியாகராஜனின் பின்னணியில் ரஜினி இருப்பதாகவும் திமுகவினர் சந்தேகிக்கின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios