காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று நேற்று முன்தினம் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த பேச்சிக்கும் நவநீதகிருஷ்ணன் போன் சுவிட்ச் ஆப் 'தற்கொலை செய்து கொள்வோம்' என அ.தி.மு.க எம்.பி பேசிய பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அ.தி.மு.கவில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான போன்கால்கள் வருவதையடுத்து செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது யாரோ ஒருவர் தங்களது செல்போனில் கிளிக்கியுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் வாட்ஸ்ஆப்பிள் வலம் வருகிறது.

மேலும் நவநீதகிருஷ்ணனின் இந்த மிரட்டலுக்கு திராவிட கட்சி தலைவர் கீ.வீரமணி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்தனர். அதேபோல இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலர் கிண்டலான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.,

யோவ் எந்திரிய்யா. தற்கொலை செய்யப் போறேன்னு சொல்லிட்டு தூங்கிக்கிட்டு இருக்க, தூங்குகிறவரை எழுப்பலாம் நடிக்கிறவரை எப்படி எழுப்புவது, அட சும்மா இருப்பா அப்புறம் எந்திரிச்சி காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்னு பாடி தொலைக்கப்போறார்' போன்ற பல கிண்டலான பதிவுகள் பதிவாகி வருகிறது.

என்ன இருந்தாலும் அவர் ஒரு எம்பி, அயர்ந்து தூங்குபவரை கிண்டல் செய்ய கூடாது என்று பாசிட்டிவ்வாகவும் ஒருசிலர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இது மத்திய அரசுக்கு கொடுக்கும் அழுத்தம் அல்ல... ராஜினாமா செய்ய சொன்னால் செத்துடுவோம்னு தமிழக மக்களை எச்சரிக்கிறார்... பூரா பயபுள்ளையும் கொலை கேசுல உள்ள போக போரிங்க...

அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் சொன்னாரே தற்கொலை செய்து கொள்வதாக..  தமிழகமெங்கும் எம்பிகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள ஒட்டியுள்ளனர். சொன்னதை செய்து தான் மானஸ்த்தன் என்பதை நிரூபித்து காட்டிய பஞ்சாயத்து நவநீதகிருஷ்ணன் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

நவநீதகிருஷ்ணன் - என்னடா ஒரு பேச்சிக்கி செத்துபோய்டுவேன்னு சொன்னா பாடக்காரன் பந்தல் போடுரவன் சங்கு ஊதுருவன் மொதகொண்டு பின்னாடியே சுத்துறீங்க? என பதிவிட்டுள்ளார்.

மேலும், நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைமை நிலைய செயலாளர் துரைமுருகனிடம் நவநீதகிருஷ்ணன் தற்கொலை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அந்த மாதிரி எதாவது நியூஸ் வந்ததா. அவர் நேற்று பேசியிருக்கலாம். ஆனால் அந்த மாதிரி நடந்ததா இதுவரை செய்தி வரலையே. இதெல்லாம் சும்மா விளையாட்டு நடத்துறாங்க. தற்கொலை செய்வதென்றால் அன்றே செய்ய வேண்டியதுதானே என கலாய்த்தார்.