அதிமுக அரசுக்கு எதிராக பேசி வரும் கமலஹாசனுக்கும், ஸ்டாலினுக்கும் மூன்றாம் பிறை திரைப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில் வருவது போன்ற நிலை ஏற்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஊழல் மலிந்திருப்பதாக கமல் கூறியதைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.அதற்கு பதிலடியாக கமலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார்,  ஸ்டாலினும், கமல்ஹாசனும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.

எத்தனை ஸ்டாலின் வந்தாலும், எத்தனை கமலஹாசன் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்றும், இவர்கள் இருவரும் தொடர்ந்து இதேபோல் பேசி வந்தால் மூன்றாம் பிறை திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் கமலுக்கு ஏற்பட்ட நிலைதான் இருவருக்கும் ஏற்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார்  கூறினார்.