Monsoon Precautions have been taken

சென்னையில், மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது குறித்து, செய்தியார்களிடம் பேசிய அவர், வடமேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.

மழை நீர் வெளியேறும் வகையில் ஆயிரத்து 137 கிலோ மீட்டர் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். இந்த பணிகள் 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் மழைநீர் தேங்கும் வகையில் தாழ்வாக உள்ள சுமார் 300 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தண்ணீரை வெளியேற்ற அப்பகுதிகளில் 458 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கார்த்திகேயன் கூறினார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தங்குவதற்குத் தேவையான இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் சந்திரமோகன் கூறியுள்ளார்.