உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயரை பிரதமர் மோடி தவறாக கூறியதால், அவரை கலாய்த்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கான பிரம்மாண்ட விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டிய பிறகு உரையாற்றிய மோடி, வரலாற்று சிறப்பு மிக்க இந்த நன்னாள் பல யுகங்களுக்கு நிலைத்திருக்கும் என்று பெருமிதம் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச முதல்வரை பற்றியும் மோடி பேசினார். அப்போது உத்தரப்பிரதேசத்தின் சக்திவாய்ந்த, வெற்றிகரமான, பிரபலமான முதலமைச்சர் ஆதித்ய யோகிநாத் என்று பேசினார். யோகி ஆதித்யநாத் என்பதற்கு பதிலாக, ஆதித்ய யோகிநாத் என்று தவறுதாலாக கூறியதால், நெட்டிசன்கள் கலகலப்பான மீம்ஸ்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆதித்ய யோகிநாத் என்ற ட்விட்டரில் ட்ரெண்டானது. குறித்து கிண்டலாக பதிவிட்ட ட்விட்டர் பயனாளர் ஒருவர் “யோகி ஆதித்யநாத் பெயர் மாற்றி கூறுவதில் பெயர் போனவர். அவரின் பெயரையே மோஜி மாற்றி கூறினார்’’.இதுதொடர்பாக பலரும் மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆதித்யநாத் ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. அலகாபாத், பிராய்க்ராஜ் எனவும், ஃபைசாபாத் மாவட்டம் அயோத்தி எனவும், முகல் சாராய் ரயில் நிலையம் தீன் தயாள் உப்த்யாய் ரயில் எனவும் பெயர் மாற்றப்பட்டது.