நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுலின் பேச்சு அனைவரையும் கவருவதாக அமைந்தது. அவர் பேசி முடித்தவுட்ன் ராகுலை அருகில் அழைத்த பிரதமர் நரேந்தி மோடிஇ கட்டிப் பிடித்த அவரது பேச்சை பாராட்டினார். சற்று நேரத்துக்கு முன்பு மிகக் கடுமையாக மோதிக் கொண்ட மோடியும் – ராகுலும் கட்டிப் பிடித்துக் கொண்டு பாராட்டிய சம்பவம் நாடாளுமன்றத்தை நெகிழச் செய்தது.

இன்று மக்களவையில்  நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி இந்த நாட்டிற்காக உழைக்கவில்லை என்றும் சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி என கண்களைப் பார்த்து பேச வேண்டும். ஆனால் அவரால் அது முடியாது. அவர் என்னை பார்ப்பதைத் தவிர்க்கிறார். மோடியின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என தனிப்பட்ட முறையில் சரமாரியாக தாக்கிப் பேசினார்.

ராகுலின் தீப்பொறி பேச்சு காங்கிரஸ் உறுப்பினர்களை மட்டுமல்லாமல் , பாஜகவினரையும் வெகுவாக கவர்ந்து. மோடியை அவர் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியபோது, மோடி புன்னகையுடன் காட்சியளித்தார்.

ராகுல் காந்தி பேசி முடித்ததும் ராகுலை அருகில் அழைத்த பிரதமர் நரேந்தி மோடி கட்டிப் பிடித்த அவரது பேச்சை பாராட்டினார். சற்று நேரத்துக்கு முன்பு மிகக் கடுமையாக மோதிக் கொண்ட மோடியும் – ராகுலும் கட்டிப் பிடித்துக் கொண்டு பாராட்டிய சம்பவம் நாடாளுமன்றத்தை நெகிழச் செய்தது.