மக்களவைத்  தேர்லில் பாஜக  பெரும்பான்மையுடன் அமோக வெற்றிபெற்றதையடுத்து கடந்த 30-ம் தேதி பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 
இதையடுத்து தென்னிந்தியாவில் உள்ள வைணவத் தலங்களுள் ஒன்றான குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் வரும் 8-ம் தேதி அன்று பிரதமர் மோடி, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு, கடவுளுக்கு நன்றி செலுத்தும்விதமாக இங்கு வழிபாடு செய்ய இருக்கிறார். 

காலை 11.30 மணிக்குக் கேரளா வரும்  மோடி அன்று கோயிலில் நடைபெறும் உச்சிகால பூஜையில் பங்குகொள்வார் எனத் தெரிகிறது. 

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அன்று மாலை 4 மணிக்கு அவர் கேரளாவிலிருந்து புறப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்த அவரது நிகழ்ச்சி நிரல் என்ன என்பது அறிவிக்கப்படவில்லை. அவரோடு வேறு யார் யார் கேரளா வருகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.


இதே போன்று ஜூலை மாதம் 9-ம் தேதி திருப்பதியில் தரிசனம் செய்ய இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பாஜக இந்தியா முழுவதும் வெற்றி பெற்றபோதும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்