கொரோனா காலத்தின்போது, இந்தியா பூடானுக்கு 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பூடானுக்கு வழங்கியுள்ளது.
பூடான் நாட்டின் உயரிய விருதான 'கடாக் பெல் வி கோர்லோ' விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பூடான் நாட்டின் தேசிய நாளான இன்று பிரதமர் மோடிக்கு இந்த விருதை பூடான் பிரதமர் லோடே ஷெரிங் அறிவித்தார்.
இதுதொடர்பாக அந்நாட்டின் பிரதமர் லோதே ஷெரிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாண்புமிகு இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு பூடானின் உயரிய சிவிலியன் விருதான கடாக் பெல் வி கோல்லோ விருது வழங்கப்படுகிறது. பூடானுடன் பல ஆண்டுகளாக இந்தியா நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது. கொரோனா காலத்திலும், பல உதவிகளை இந்தியா செய்ததை நினைவுகூர்கிறோம்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து உதவி செய்து வரும் இந்தியாவுக்கும், அதன் பிரதமர் மோடிக்கும் பூடான் அரசு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்த விருதை பெறுவதற்கு பிரதமர் மோடி பொருத்தமானவர். பூடான் மக்களின் அன்பை பெற்றவராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவருக்கு விருது வழங்கும் நாளை நான் எதிர்பார்த்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.
பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்ஜெல் வாங்சக் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கருத்தில், “ இந்த விருதுக்கு மோடி மிகத் தகுதியானவர். பூடான் தேசத்துக்கு மக்களின் சார்பாக வாழ்த்துகள். கரோன காலம் மட்டுமல்லாமல் அதற்கு முன்பு பல ஆண்டுகளாக மோடிஜியுடன் நிபந்தனையற்ற நட்புறவை பூடான் அரசு வைத்துள்ளது. அனைத்து விதமான உரையாடல்களிலும், பேச்சுகளிலும் அவரின் திறமை, அனுபவம் சிறப்பானது. ஆன்மிக எண்ணம் கொண்டவர் பிரதமர் மோடி. அவரை நேரில் கவுரவிக்க ஆவலாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பூடான் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்தினார்.
அங்கு இந்தியாவின் உதவியோடு ஹைட்ரோ-பவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலைகள் இணைப்பு, விண்வெளி, கல்வி உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தின்போது, இந்தியா பூடானுக்கு 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பூடானுக்கு வழங்கியுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி அந்நாட்டின் உயரிய விருது அளிக்கப்பட உள்ளது.
