டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல் நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி மற்றும் , அமித்ஷா  ஆகியோர் அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைகின்றனர்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லியின் உடல் நிலை மேலும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருடைய உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

சிறப்பு மருத்துவக்குழுவினரின் கண்கானிப்பில் அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அருண் ஜெட்லியின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.