Asianet News TamilAsianet News Tamil

பாஜக தொகுதிகளில் மறைக்கப்படும் மோடி... எல்லாம் விதியாம்..!

மாநில தேர்தலில் மோடி பிரதமர் என்பதால் அவரது பெயரை சுவர் விளம்பரம் செய்ய கூடாது என்பது தேர்தல் ஆணைய விதி

Modi to be hidden in BJP constituencies ... everything is destiny
Author
Tamil Nadu, First Published Mar 31, 2021, 10:55 AM IST


தேர்தல் நெருங்கி வருவதால் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் வாகனப்பிரச்சாரம், சுவர் விளம்பரம் என வேட்பாளர்கள் தங்களையும், சின்னத்தையும் விளம்பரப்படுத்தி வருகின்றனர். பாஜக வேட்பாளரின் சுவர் விளம்பரத்தில் பிரதமர் மோடி  பெயர் அழிக்கப்பட்டுள்ளதாக இணையதளத்தில் வெளியான செய்தி பொய்யானது என அக்கட்சியின் மாவட்டத் தலைவர் கே.சிவசாமி மறுப்பு கூறியுள்ளார்.Modi to be hidden in BJP constituencies ... everything is destiny

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக, அண்ணாமலை போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அப்பகுதி சுவர்களில் எழுதப்பட்டிருந்த விளம்பரத்தில், தாமரை சின்னத்துடன், இதயதெய்வம் அம்மா மற்றும் பிரமதர் மோடியின் நல்லாசி பெற்ற வேட்பாளர் கே.அண்ணாமலைக்கு வாக்களிப்பீர் என எழுதப்பட்டிருந்தது.Modi to be hidden in BJP constituencies ... everything is destiny

ஆனால் அதில் பிரதமரின் பெயர் மட்டும் அளிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து புகைப்படம் எடுத்து இணையத்தில் பரபரப்பிய சிலர், மோடி பெயரைச் சொன்னால் வாக்குகள் கிடைக்காது என்பதால், அவரது பெயரை பாஜகவினரே அழித்துவிட்டனர் என்று விமர்சித்து வலைதளத்தில் பரவவிட்டனர்.
இந்நிலையில், வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம் பொய்யென்றும், அரவக்குறிச்சி தொகுதியில் இப்படிப்பட்ட சுவர் விளம்பரம் எங்கும் இல்லை எனவும், பாஜகவின் வெற்றியைத் தடுப்பதற்காக சிலர் இது போன்ற போலியான படங்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் பாஜக மாவட்டத்தலைவர் கே.சிவசாமி விளக்கமளித்தார்.

Modi to be hidden in BJP constituencies ... everything is destiny

அதே பாஜக போட்டியிடும் சில இடங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதாவின் சின்னம் எனக் கூறி தாமரை சின்னத்தை வைந்துள்ளனர். அங்கு மோடியின் பெயரோ அமித்ஷாவின் பெயரோ இடம்பெறவில்லை. இதற்கு விளக்கம் கூறும் பாஜகவின்,’’மாநில தேர்தலில் மோடி பிரதமர் என்பதால் அவரது பெயரை சுவர் விளம்பரம் செய்ய கூடாது என்பது தேர்தல் ஆணைய விதி’’ எனக் கூறுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios