ஆக்ஷனில் இறங்கிய மோடி..! சொன்னதை செய்து காட்டி அதிரடி..! 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்வானார். மத்தியில் ஆளும் பாஜக 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது.

மத்தியில் ஆளும் பாஜக தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தில் நாட்டின் வளர்ச்சி. முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தது. இந்நிலையில் பிரதமராக பதவி ஏற்றபின், அவருடன் 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து தற்போது நாட்டின் வளர்ச்சி வேலைவாய்ப்பு முதலீடு அதிகரிக்க 2 புதிய குழுக்களை அமைத்து உள்ளார் பிரதமர் மோடி.

இந்த குழுவில் முக்கியமாக நிர்மலா சீதாராமன் நிதின்கட்கரி பியூஸ் கோயல் உள்ளிட்டோர் இடம் பிடித்து உள்ளனர் என்பது கூடுதல் தகவல். மேலும் நரேந்திர சிங் தோமர், ரமேஷ் போக்கிரியால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆட்சியின்போது, கருப்பு பணத்தை ஒடுக்குவது, ஜிஎஸ்டி, இலவச வீடு வழங்கும் திட்டம் மருத்துவ காப்பீடு திட்டம் என மக்கள் நலனில் அதிக அக்கறை காண்பிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தியது பாஜக, இந்த நிலையில் இந்த ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் அதிக பங்கேற்கும் வகையில் தற்போது இதற்காக இரண்டு குழுக்களை அமைத்து உள்ளார்