தான் கலந்து கொண்ட ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் உலகசாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார் மோடி. 

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து உலகம் முழுவதும் பிரபலமானவராக ஜொலிக்கிறார் பியர் கிரில்ஸ்.


 
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்தார். இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 12ம் தேதி இரவு 9 மணி அளவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி உலக அளவில் அதிகம் டிரெண்டான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சாதனை படைத்துள்ளது என பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

‘உலகிலேயே மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிரதமர் மோடி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிகழ்ச்சி ட்விட்டரில் 3.6 பில்லியன் பதிவுகளை கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றதற்கான சாதனை படைத்திருந்த சூப்பர் பவுல் 53 எனும் நிகழ்ச்சியின் சாதனையை முறியடித்துள்ளது. அந்த நிகழ்ச்சியை3.4 பில்லியன் பதிவுகளை பெற்றிருந்தது. அதை பின்னுக்குத் தள்ளி .2 பில்லியன் அதிகரித்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி முதலிடம் பிடித்துள்ளது’ என  அவர் தெரிவித்துள்ளார்.