Asianet News TamilAsianet News Tamil

பல்துறை மேதை பிரதமர் மோடி!! நீதிபதி அருண் மிஸ்ரா நீதிபதிகள் மாநாட்டில் புகழாரம்.!!

உலகின் 20 நாடுகளை சேர்ந்த நீதிபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில், 'இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல்துறை வித்தகர். ஆகச் சிறந்த அறிவாளி. உலகளவில் சிந்திக்கிறார், அதை நம் மண்ணுக்கு ஏற்றப்படி செயல்படுத்துகிறார்' என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.இவரது புகழ்ச்சி மோடிக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

Modi is the most versatile Prime Minister !! Justice Arun Mishra honored at the judges' conference.
Author
Delhi, First Published Feb 22, 2020, 11:55 PM IST

 T.Balamurukan

உலகின் 20 நாடுகளை சேர்ந்த நீதிபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில், 'இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல்துறை வித்தகர். ஆகச் சிறந்த அறிவாளி. உலகளவில் சிந்திக்கிறார், அதை நம் மண்ணுக்கு ஏற்றப்படி செயல்படுத்துகிறார்' என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.இவரது புகழ்ச்சி மோடிக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

Modi is the most versatile Prime Minister !! Justice Arun Mishra honored at the judges' conference.

டெல்லியில் சர்வதேச நீதித்துறை மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நன்றியுரை ஆற்றிய  நீதிபதி அருண் மிஸ்ரா, பிரதமர் மோடியையும், அவரது செயல்பாடுகளையும் புகழ்ந்தார். "சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொலைநோக்கு பார்வை உடையவர் பிரதமர் நரேந்திர மோடி. இவரால், இந்தியா சர்வதேச சமூகத்தின் நட்பு நாடாக இருக்கிறது. கண்ணியமான மனித இருப்பு எங்கள் பிரதான அக்கறை. உலகளவில் சிந்தித்து, உள்நாட்டிற்கு ஏற்றவாறு செயல்படும் பல்துறை மேதை பிரதமர் மோடிக்கு நன்றி.உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியா எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுகிறது என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இந்தியா அரசியலமைப்பு கடமைகளுக்கு உறுதியளித்து, பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டு, அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையை வலுப்படுத்துவது என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாக இருக்கிறது.ஜனநாயகத்தின் முதுகெலும்பு நீதித்துறை என்றும், சட்டமன்றம் இதயம் என்றும், நிர்வாகம் மூளை என்றும் குறிப்பிட்ட அவர், இவை மூன்றும் சுதந்திரமாக செயல்பட்டால்தான் ஜனநாயகம் வெற்றிகரமாக இருக்கும் என்று தனது உரையின்போது குறிப்பிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios