தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தன்று பிரதமர் மோடி, மின்னஞ்சல்களை பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரும் தேர்தல் வெற்றியை அறியும் ஆவலுடன் தொலைக்காட்சிகளை பார்த்து கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் மோடி அலுவல் தொடர்பான மின்னஞ்சல்களை பார்ப்பதில் மூழ்கியிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

காலையில் மின்னஞ்சல்களை பார்க்கத் தொடங்கிய மோடி, காலை 10.30 மணிக்கு பிறகே, பாஜகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருந்த முன்னணி நிலவரங்களில் கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வெற்றி குறித்து எள்ளளவும் ஐயம் கொள்ளாததாலேயே பிரதமர் மோடி வேறு பணிகளில் மூழ்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.