Asianet News TamilAsianet News Tamil

ஜவஹர்லால் நேருவுக்கு தெரியாத ராஜதந்திரமா மோடிக்கு தொரியும்.? பழ கருப்பையை அதிரடி பேச்சு.

ஜவஹர்லால் நேரு விற்கு தெரியாத ராஜதந்திமா மோடிக்கு தெரியும்? காஷ்மீரில் மாற்றம் கொண்டு வந்தது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் தெரியுமா? என்ன ஆவேசமாக பேசினார். 

Modi has diplomacy then unknown to Jawaharlal Nehru? pala.Karuppiah Speech against bjp.
Author
Chennai, First Published Feb 20, 2021, 4:20 PM IST

எனது பார்வையில் நபிகளார் எனும் தலைப்பில் சென்னை திருவல்லிக்கேணியில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பழ.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பழ.கருப்பையா பேச்சு: இஸ்லாமிய குடும்பங்களை முத்தலாக் சட்டம் மூலம் நபிகள் நாயகம் காப்பாற்றமாட்டார் ஆனால் மோடி காப்பாற்றுவாரா? வாஜ்பாய் மோடியுடன் யார் கூட்டு சேராமல் இருக்கிறார்களோ அவர்களோடு பழகுங்கள்.

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அச்சுறுத்துவார்கள் என்று தெரிந்து தான் அன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினார் நேரு என்றார். ஜவஹர்லால் நேரு விற்கு தெரியாத ராஜதந்திமா மோடிக்கு தெரியும்? காஷ்மீரில் மாற்றம் கொண்டு வந்தது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் தெரியுமா? 

Modi has diplomacy then unknown to Jawaharlal Nehru? pala.Karuppiah Speech against bjp.

என்ன ஆவேசமாக பேசினார். பின்னர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார், அவர் பேசியதாவது: கடவுளின் பெயரால் உலகம் பிளவுபட கூடாது என்று எண்ணியவர் நபிகள் நாயகம், நாங்கள் ஆண்ட பரம்பரை என்று இன்றைக்கு பல பேர் சொல்லலாம் ஆனால் உண்மையில் ஆண்ட பரம்பரை நபிகள் நாயகம் தான். அந்த காலகட்டத்திலும் பிறப்பின் அடிப்படையில், நிறத்தின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இருந்தது, அதனை உடைத்து அனைவரும் சமம் என்று உலகிற்கு உணர்த்தியவர் நபிகள் நாயகம். 

Modi has diplomacy then unknown to Jawaharlal Nehru? pala.Karuppiah Speech against bjp.

சகோதரத்துவமும், சமாதானத்துவமும் தான் உலக அமைதிக்கு ஒரே வழி, இனம் கடந்து மொழி கடந்து சகோதரத்துவம் மேலோங்கி இருந்திருந்தால் இலங்கையில் இவ்வளவு பிரச்சினை நிகழ்ந்திருக்காது, நபிகள் பற்றி தவறாக பேசி மத உணர்வை தூண்டி சிறுமை படுத்த பார்க்கிறார்கள். ஒற்றுமையை சிதைப்பதற்காகவே அவர்கள் அப்படி செய்கிறார்கள். சகோதரத்துவம் என்பது அரசியலில் மட்டுமே, சாதி பார்த்து கை குலுக்கும் பழக்கம் இன்னமும் இங்கே இருக்கிறது. சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் போதித்த நபிகள் நாயகத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்றார் 

 

Follow Us:
Download App:
  • android
  • ios