காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாயமாகிவிடுவார். அவர் எங்கு சென்றுள்ளார் என்கிற தகவலை காங்கிரஸ் கட்சி மிகவும் ரகசியமாக வைத்திருக்கும். ராகுலின் இந்த செயல் சர்ச்சையானதை தொடர்ந்து கடந்த முறை மாயமாவதற்கு முன்பு ராகுல் காந்தி தான் எங்கு செல்கிறேன் என்றுதனது ட்விட்டர் பக்க்ததில் கூறிவிட்டு சென்றார்.

அதாவது சில நாட்கள் ஓய்வெடுக்க வெளிநாடு செல்வதாக கூறிவிட்டு ராகுல் சென்றார். ஆனால் எங்கு செல்கிறேன் என்பதை ராகுல் தெரிவிக்கவில்லை. எதிர்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்தி ரகசியமாக எங்கு சென்று ஓய்வெடுக்கிறார் என்கிற கேள்விகள் எழுந்தன. மேலும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வந்தது உள்ளிட்ட பிரச்சனைகளின் போது ராகுல் மாயமானது சர்ச்சையானது.

இந்த நிலையில் பிரதமர் மோடி ராஜஸ்தானில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பிரதமராக பதவி ஏற்றது முதல் நாட்டிற்காக ஓய்வு எடுக்காமல் உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார். தான் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்காகவும், இந்திய மக்களுக்காகவும் தான் கடுமையாக உழைப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

கடந்த நான்கரை வருடத்தில் ஒரு நாளாவது தான் விடுமுறை எடுத்திருப்பதாக தகவல் வந்ததாக என்று கூட்டத்தினரை பார்த்து மோடி கேட்டார். மேலும் திடீரென ஒரு வாரம் தான் எங்காவது மாயமாகி நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டதுடன், ஓய்வெடுக்க தான் எங்காவது சென்றதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றும் மோடி கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி அடிக்கடி மாயமாவதையும், வெளிநாடுகளுக்கு ஓய்வெடுக்க செல்வதையும் குறிப்பிட்டு மோடி இவ்வாறு பேசியுள்ளார்.