Asianet News TamilAsianet News Tamil

ஒண்ணு செஞ்சாலும் தரமாய் , சிறப்பாய் செஞ்ச மோடி!

*    தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ம் தேதி, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்துக்கான நாள் ஆகும். இரு பக்கமும் அரசுகள் தூக்கி எறியப்படும்: மு.க.ஸ்டாலின். 
 

modi doing best work
Author
Chennai, First Published May 6, 2019, 3:04 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

*    தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ம் தேதி, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்துக்கான நாள் ஆகும். இரு பக்கமும் அரசுகள் தூக்கி எறியப்படும்: மு.க.ஸ்டாலின். 
(தல, வழக்கம்போல துளியூண்டு சீட்டை வெச்சுகினு வெகு விமரிசையா உரையாத்தி தள்ளிட்டிங்கோ. யூஸுவல் டயலாக்னாலும் நீங்க பேசச்சொல்லோ அதுக்கு  ஒரு கிக் இருக்குது போங்கோ. ஆனாலும் ‘ஆக! இன்றைக்கு! மவுத் புளிப்பு, மேங்கோ புளிப்பு!’ இதையெல்லாம் விட்டுட்டீங்க ஏன் தல?)

*    உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கவர்னர் மேல்முறையீடு செய்ய அமைச்சரவை அனுமதிக்காது. தனிப்பட்ட முறையில் அவர் செய்யலாம். ஆனால் அதற்கான செலவை அவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்: புதுவை முதல்வர் நாராயணசாமி. 
(அண்ணே உங்க பிரச்னையே ‘கேஸுக்கு யார் பீஸு கொடுக்குறது’ அப்படிங்கிறதுதானா? நான் கூட வேறென்னவோ பெரிய லெவல் அரசியல்ன்னு நினைச்சு ஏமாந்துட்டேன். எதுக்கும் ஒரு பதினஞ்சு நாள் யோசிச்சுட்டு  அப்பாலிக்கா தெளிவா முடிவெடுங்கண்ணே)

*    தமிழகத்தில் மூன்று மாதங்களுக்குப் பின் கட்டாயம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். மக்களுக்கு சந்தேகமே வேண்டாம்: முதல்வர் பழனிசாமி. 
(என்ன தலைவரே இது புது பேச்சு. நாங்க என்னைக்கு உங்களை சந்தேகப்பட்டோம். இதுவரைக்கும் நீங்க சொல்லி எத்தனை மூணு மாசத்தைப் பார்த்திருக்கோம், எப்பவாச்சும் டவுட்டா ஒரு கேள்வி கேட்டிருக்கோமா? பொசுக்குன்னு இப்படி பேசி மனச நோவடிக்காதீங்க.)

*    நிலம், ஆகாயம், நீர் என கிடைக்கும் அனைத்திலும் காங்கிரஸ் ஊழல்களை செய்துள்ளது. ஆனால் என்னமோ சத்தியவான் போலப் பேசுகிறார் ராகுல்: பிரதமர் மோடி. 
(கசகசன்னு, கிடைக்கிற எல்லாத்துலேயும் கை வைக்காம ஒண்ணுல வெச்சாலும் உருப்படியா தரமா, சிறப்பா வைக்கணும், உங்களை மாதிரி #ரஃபேல் நினைவுகள்!....ன்னு ஏனோ மனசுக்குள்ளே ஒரு குயிலு மறுக்கா மறுக்கா இப்படி கூவுது நமோ ஜி!)

*    சட்டசபை இடைத்தேர்தலில் இருபத்து ரெண்டு தொகுதிகளிலும் தாங்கள் வெற்றி பெறுவோம்-ன்னு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறுவதுதான் 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி: அமைச்சர் ஜெயக்குமார். 
(விடுங்கண்ணே.....’அ.தி.மு.க.நல்லாட்சி நடத்துகிறது, சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது, அடிப்படை தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுது’ன்னு நீங்க அள்ளியள்ளி விடுறப்ப, அவங்க சிரிக்கவா செய்றாங்க? பேயாம கேட்டுட்டுதானே இருக்காங்க?)

Follow Us:
Download App:
  • android
  • ios